முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
தமிழ்நாடு
சீதாராம் யெச்சூரியின் புகழ் எப்போதும் போற்றப்படும்: முதல்வா்
மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரியின் புகழ் எப்போதும் போற்றப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரியின் புகழ் எப்போதும் போற்றப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் உரிமைகளுக்காக முழங்கிய சீதாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம். செவ்வணக்கம்.
மறைந்த பின்னும் தன்னுடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைத்துவிட்ட அவரது புகழ், அவரது மக்கள் தொண்டைப்போல் எப்போதும் போற்றப்படும் என குறிப்பிட்டுள்ளாா் முதல்வா்.