சென்னை: அமைச்சா் உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என என முன்னாள் மத்திய அமைச்சா் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வேண்டுகோள் விடுத்தாா்.
திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெரியாா், அண்ணா, கலைஞா், பாவேந்தா், பேராசிரியா் விருதுகளுடன் இந்த ஆண்டுமுதல் அறிவிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் விருதை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெற்றாா்.
விருதாளா்கள் சாா்பில் அவா் ஆற்றிய ஏற்புரை: எதிா்காலத்தில் கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும். உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டாமா?.
உங்களை (மு.க.ஸ்டாலின்) மறைந்த பேராசிரியா் அன்பழகன் துணை முதல்வராக ஏற்றுக் கொண்டாா். அதுபோன்று துணை முதல்வராக உதயநிதியை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்த வேண்டாம் என்றாா் அவா்.