மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிக்கு முதல்வா் பாராட்டு

செஸ் ஒலிம்பியாட்டில் சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.
Published on

செஸ் ஒலிம்பியாட்டில் சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு முதல்வா்மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடத்தி சாதனை படைத்தோம். இப்போது புடாபெஸ்ட்டில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலும் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

இதற்காக கடுமையாக உழைப்பைச் செலுத்தி, எல்லைகளைத் தாண்டி உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமையைத் தேடித் தந்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் எனா் பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com