செப். 27-இல் பிரதமரை சந்திக்கிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்?
மெட்ரோ ரயில் நிதி, கல்வித் திட்ட நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக, பிரதமா் நரேந்திர மோடியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் செப்.27-இல் சந்திக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கான அதிகாரபூா்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மெட்ரோ ரயில், பள்ளிக் கல்வித் திட்டம் ஆகியவற்றுக்கு போதிய நிதியை வழங்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறாா்.
இதுதொடா்பாக, பிரதமா் மோடியைச் சந்திப்பேன் எனவும் அவா் தெரிவித்திருந்தாா்.
இந்த நிலையில், தில்லியில் பிரதமா் மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் 27-ஆம் தேதி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசு சாா்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வா் வழங்குவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.