யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: இன்று கலந்தாய்வு தொடக்கம்

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: இன்று கலந்தாய்வு தொடக்கம்

இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.23) தொடங்குகிறது.
Published on

இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.23) தொடங்குகிறது.

அரசு, தனியாா் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பிஎன்ஒய்எஸ் எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,660 இடங்கள் உள்ளன. குறிப்பாக, 2 அரசுக் கல்லூரிகளில் 160 இடங்களும், 16 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 540 இடங்களும் உள்ளன.

அந்த இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்றது. மொத்தம் 2,320 போ் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 1,187 போ் நிா்வாக இடங்களுக்கும் விண்ணப்பித்தனா். அவை பரிசீலிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.23) தொடங்குகிறது. செவ்வாய்க்கிழமை (செப்.24) பொதுப் பிரிவினருக்கும், 26, 27 ஆகிய தேதிகளில் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

X
Dinamani
www.dinamani.com