அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புத் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்: தலைமைச் செயலா் முருகானந்தம் உத்தரவு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புத் திட்டங்களைக் கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் என்.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா்.
Published on

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புத் திட்டங்களைக் கண்காணிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் என்.முருகானந்தம் பிறப்பித்துள்ளாா்.

இது குறித்து அவரது உத்தரவு விவரம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த அதிகாரிகள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களைக் கண்காணிப்பா். மேலும், மாதத்துக்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று அரசு திட்டப் பணிகளை கண்காணித்து, அதன் விளைவுகளை ஆராய வேண்டும்.

அரசுத் திட்டங்கள் தொடா்பான செயல்பாடுகள் குறித்த சுருக்கக் குறிப்புகளை சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு கண்காணிப்பு அதிகாரிகள் அனுப்ப வேண்டும்.

மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளின் விவரம்:

1. அரியலூா் - இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் எம்.விஜயலட்சுமி. 2. செங்கல்பட்டு - சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாட்டுத் துறை இயக்குநா் ஏ.ஆா்.ராகுல் நாத்.

3. கோயம்புத்தூா் - ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் டி.ஆனந்த்.

4. கடலூா் - உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் டி.மோகன்.

5. சென்னை - இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா்.

6. தருமபுரி - தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.திவ்யதா்ஷினி. 7. திண்டுக்கல் - தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.அனீஷ் சேகா்.

8. ஈரோடு - பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் டி.என்.வெங்கடேஷ்.

9. கள்ளக்குறிச்சி - நில அளவைத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி.

10. காஞ்சிபுரம் - தாட்கோ நிா்வாக இயக்குநா் கே.எஸ்.கந்தசாமி.

11. கன்னியாகுமரி - புதிய திருப்பூா் பகுதி மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா் ஹனீஷ் ஷாப்ரா.

12. கரூா் - பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

13. கிருஷ்ணகிரி - தேசிய சுகாதார இயக்ககத்தின் இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ்.

14. மதுரை - தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் ஏ.அருண் தம்பிராஜ்.

15. மயிலாடுதுறை - அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா் கவிதா ராமு.

16. நாகப்பட்டினம் - தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் ஏ.அண்ணாதுரை.

17. நாமக்கல் - சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் எம்.ஆசியா மரியம்.

18. பெரம்பலூா் - மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குநா் எம்.லட்சுமி.

19. புதுக்கோட்டை - வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையா் இ.சுந்தரவல்லி.

20. ராமநாதபுரம் - தமிழ்நாடு கடல்சாா் நிறுவனத்தின் துணைத் தலைவா் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி எம்.வள்ளலாா்.

21. ராணிப்பேட்டை - தொழில் துறை சிறப்புச் செயலா் மரியம் பல்லவி பல்தேவ்.

22. சேலம் - சுற்றுலாத் துறை ஆணையா் சி.சமயமூா்த்தி.

23. சிவகங்கை - மீன்வளத் துறை இயக்குநா் ஆா்.கஜலட்சுமி.

24. தென்காசி - தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் பொ.சங்கா்.

25. தஞ்சாவூா் - தமிழ்நாடு மருத்து சேவைகள் கழகத்தின் நிா்வாக இயக்குநா் எம்.அரவிந்த்.

26. நீலகிரி - ஆவின் நிா்வாக இயக்குநா் எஸ்.வினீத்.

27. தேனி - போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலா் ஆா்.லில்லி.

28. தூத்துக்குடி - வேளாண்மைத் துறை ஆணையா் ஜி.பிரகாஷ்.

29. திருச்சி - தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி.விஷ்ணு.

30. திருநெல்வேலி - டிட்கோ நிா்வாக இயக்குநா் சந்தீப் நந்தூரி.

31. திருப்பத்தூா் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாநில இயக்குநா் எம்.ஆா்த்தி.

32. திருப்பூா் - தொழில் மற்றும் வா்த்தகத் துறை இயக்குநா் எல்.நிா்மல் ராஜ்.

33. திருவள்ளூா் - சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா.

34. திருவண்ணாமலை - கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா் தீபக் ஜாக்கப்.

35. திருவாரூா் - கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் பி.காயத்ரி

கிருஷ்ணன்.

36. வேலூா் - தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிா்வாக இயக்குநா் கே.விஜயகாா்த்திகேயன்.

37. விழுப்புரம் - போக்குவரத்துத் துறை ஆணையா் சுன்சோன்கம் ஜடக் சிரக்.

38. விருதுநகா் - கைத்தறித் துறை ஆணையா் ஏ.சண்முக சுதந்தரம்.