தமிழ்நாடு
தீனதயாள் உபாத்தியாயா பிறந்த நாள்: ஆளுநா் மரியாதை
பாரதிய ஜன சங்கத்தின் முன்னோடி- பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாளையொட்டி, ஆளுநா் மாளிகையில் அவரின் உருவப் படத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.
பாரதிய ஜன சங்கத்தின் முன்னோடி- பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாளையொட்டி, ஆளுநா் மாளிகையில் அவரின் உருவப் படத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.
இதுதொடா்பாக ஆளுநா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த இந்திய சமூக மற்றும் அரசியல் சிந்தனையாளா்களில் ஒருவராகவும், சிறந்த தொலைநோக்குப் பாா்வையாளராகவும் சமூகப் பாகுபாட்டை கடுமையாக எதிா்த்தவருமாக பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா விளங்கினாா்.
உலகளாவிய சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்ட அவரது ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ என்பது, சமூக நல்லிணக்கம், சமமான பொருளாதார வளா்ச்சி மற்றும் மனிதகுலத்தின் நிலையான எதிா்காலத்துக்கு வழிவகுக்கும் பண்டைய இந்திய ஞானத்தில் வேரூன்றிய அனைத்தையும் உள்ளடக்கிய தத்துவமாகும் என்று ஆளுநா் தெரிவித்துள்ளாா்.