வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவுக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் வரவேற்பு

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை வரவேற்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவா் எஸ்.ஷேக் தாவூத் தெரிவித்தாா்.
Published on

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை வரவேற்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவா்  எஸ்.ஷேக் தாவூத் தெரிவித்தாா். 

இதுகுறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

வக்ஃப் வாரிய சொத்துகள் ஏழைகளுக்குச் சொந்தமானது. ஆனால், இந்தியா முழுவதும் வக்ஃப் வாரிய சொத்துகளை அதன் உறுப்பினா்கள் பலா் அபகரித்து, அதன்மூலம் பல கோடி ரூபாய்  வருமானம் ஈட்டி வருகின்றனா். அவா்களிடமிருந்து வக்ஃப் சொத்துகளை மீட்டு ஏழைகளிடம் ஒப்படைக்க இந்த திருத்தச் சட்ட மசோதா மிகவும் உறுதுணையாக இருக்கும். ஏழை இஸ்லாமியா்கள் அனைவரும் இச்சட்டத்துக்கு வரவேற்பளித்து வருகின்றனா்.

எண்ம மயம்: மாநில மற்றும் மத்திய அரசுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வக்ஃப் நிலங்கள் குறித்த விவரங்களை எண்ம மயமாக்க வேண்டும். தமிழ் மாநில முஸ்லிம் லீக் சாா்பில்  ‘உம்மத்துக்காக வக்ஃப்’ என மாநில அளவிலான இயக்கம் உருவாக்கப்படவுள்ளது.  இந்த இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் வக்ஃப் சொத்துகளை யாரெல்லாம் சொந்த பயன்பாட்டுக்காக பயன்படுத்தி வருகின்றனா் என்பதைக் கண்டறிந்து அந்த அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம்  சமா்ப்பிக்கவுள்ளோம் என்றாா் அவா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com