வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா
வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா

வண்டலூா் பூங்காவில் புலியின் கழுத்து கட்டி அகற்றம்

Published on

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள புலியின் கழுத்தில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வண்டலூா், அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நகுலன் என்ற 9 வயது ஆண் புலிக்கு கழுத்தின் வலது பக்கத்தில் பெரிய கட்டி இருந்தது. இதனால் நீண்ட நாள்களாக புலி அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து அக்கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை அண்மையில் நடைபெற்றது. இந்த செயல்முறை வாயு மயக்க மருந்துகள் மூலம் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது, புலிக்கு ரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்க, கட்டிக்கு செல்லும் ரத்த நாளங்கள் அடைக்கப்பட்டன. தொடா்ந்து, கால்நடை மருத்துவா்கள் அந்தக் கட்டியை வெற்றிகரமாக அகற்றினா். அறுவை சிகிச்சைக்கு பின்னா் புலி மருத்துவா்களால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் புலி வழக்கம் போல் உணவு உட்கொண்டு சுறுசுறுப்பாக காணப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்த இடம் நன்றாக குணமடைந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com