அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்கோப்புப் படம்

வடலூா் பெருவெளியில் வெட்டப்படும் மரங்கள்: அன்புமணி கண்டனம்

வடலூா் சத்திய ஞான சபை பெருவெளியில் மரங்கள் வெட்டப்படுவதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Published on

வடலூா் சத்திய ஞான சபை பெருவெளியில் மரங்கள் வெட்டப்படுவதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலூா் மாவட்டம் வடலூா் வள்ளலாா் சத்திய ஞான சபை பெருவெளியை சுற்றி நன்கு வளா்ந்த நிலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மரங்களை ராட்சத எந்திரங்களைக் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனா். பிப். 11-ஆம் தேதி தைப்பூச பெருவிழா நடைபெறவுள்ள நிலையில் அடிப்படை வசதிகளை செய்வதற்காகத் தான் மரங்கள் பிடுங்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியதாக கூறிய வள்ளலாரை மதிக்கும் அரசாக இருந்தால் சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்தப் பகுதியில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com