சென்னை : தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப். 7 முதல் பிப். 14 வரை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப். 15 முதல் பிப். 21 வரை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் 25-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 5 முதல் 27-ஆம் தேதி வரையும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 28 தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.