பாலியல் வழக்குகளை விசாரிக்க 7 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்: பேரவையில் முதல்வா் அறிவிப்பு

பாலியல் வழக்குகளை விசாரிக்க
7 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்: பேரவையில் முதல்வா் அறிவிப்பு
Updated on

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்பட ஏழு இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு சனிக்கிழமை பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளிப்பதன் வாயிலாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். அதன்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூா், சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையில் சுற்றுப்புறப் பகுதி என ஏழு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

இத்தகைய குற்றங்கள் தொடா்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கின்ற கைதிகளுக்கு முன்விடுதலை கிடைக்காத வகையில் தமிழ்நாடு சிறைத் துறை விதிகள் திருத்தம் செய்யப்படும் என்றாா் முதல்வா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com