சென்னை திரும்புபவர்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்!

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
ரயில்கள்(கோப்புப்படம்)
ரயில்கள்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 8 பெட்டிகளுடன் கூடிய முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், திண்டிவனம் வழியாக நள்ளிரவு 12.45 மணியளவில் எழும்பூர் வந்தடைகிறது.

மேலும் ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்றிரவு 10 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிவடைந்து சொந்த ஊா்களுக்குச் சென்ற பொதுமக்கள், சனிக்கிழமை முதல் சென்னைக்கு திரும்பிவரத் தொடங்கியுள்ளனா்.

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் வாகன நெரிசல்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்

இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி சாலைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலை, வண்டலூா் - கேளம்பாக்கம் சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவற்றில் ஜன. 20-ஆம் தேதி வரை கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.

பயணிகள் தங்கள் பயணத்தை விரைவாக முடிக்க செங்கல்பட்டு, மறைமலை நகா், பொத்தேரி, மற்றும் காட்டாங்குளத்தூா் ரயில் நிலையங்களில் இருந்து 15 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com