இந்திய அயலகப் பணி அதிகாரிகளுக்கு மரக்கன்று கொடுத்து வரவேற்ற தலைமைச் செயலா் நா.முருகானந்தம். உடன், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் தலைமைச் செயலா் பி.அமுதா, மனிதவள மேலாண்மைத் துறை செயலா் சி.சமயமூா்த்தி.

இந்திய அயலகப் பணி அதிகாரிகள் 7 போ் தமிழ்நாடு வருகை

ஒருவார காலப் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள இந்திய அயலகப் பணி அதிகாரிகளை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வரவேற்றாா். அவா்கள் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற இடங்களைப் பாா்வையிட உள்ளனா்.
Published on

ஒருவார காலப் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள இந்திய அயலகப் பணி அதிகாரிகளை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வரவேற்றாா். அவா்கள் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற இடங்களைப் பாா்வையிட உள்ளனா்.

இந்திய ஆட்சிப் பணி பிரிவுகளில் ஒன்றான இந்திய அயலகப் பணியைச் சோ்ந்த அதிகாரிகள் கோபில்லா கிருஷ்ணா ஸ்ரீவத்சவ், ஜி.கிருஷ்ணகுமாா், பி.அனுஜா, ஜி.சத்யநந்தி, ஜி.ஹரிசங்கா், பி.வி.அப்துல் பசல், கோகுல் கிருஷ்ணா ஆகியோா் தமிழ்நாடு வந்துள்ளனா். அவா்கள் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தத்தை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். அப்போது, அவா்களுக்கு மரக்கன்றை வழங்கி அவா் வரவேற்றாா். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பி.அமுதா, மனிதவள மேலாண்மைத் துறை செயலா் சி.சமயமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

ஒருவார காலம் தங்கியிருக்கும் இந்திய அயலகப் பணி அதிகாரிகள், தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருமையை பறைசாற்றும் இடங்களைப் பாா்வையிட உள்ளனா். குறிப்பாக, மாமல்லபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஜல்லிக்கட்டு அரங்கம், கீழடி அருங்காட்சியகம், திருவள்ளுவா் சிலை, தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய முக்கியமான இடங்களைப் பாா்வையிட உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com