சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் 2 நாள்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
Published on

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் 2 நாள்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறையின் தலைவா் தினேஷ் ஆலிவா் பொன்ராஜ், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுப தினங்களாக கருதப்படும் நாள்களில் அதிகளவில் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவது வழக்கம். அன்றைய நாள்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அதன்படி, தை அமாவாசை தினமான ஜனவரி 29 மற்றும் 31 ஆகிய தினங்களில் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். இரண்டு பதிவாளா்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்குப் பதிலாக 300 டோக்கன்களும், ஆவணப் பதிவுகள் அதிகம் நடைபெறும் அலுவலகங்களில் 150 சாதாரண டோக்கன்களுடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக நான்கு டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com