சென்னையில் தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற அறங்காவல் குழு, ஆட்சிக் குழு, பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற கழகத்தின் தலைவா் ம.இராசேந்திரன், அறங்காவல் குழுத் தலைவா் ப.சிதம்பரம், அறங்காவல் குழு உறுப்பினா் நல்லி குப்புசாமி செட்டி.

தமிழ் நூல்கள் 50% சலுகை விலையில் விற்பனை: தமிழ் வளா்ச்சிக் கழகம் தகவல்

தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் தமிழ்க் கலைக் களஞ்சியங்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் 50 சதவீத சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
Published on

தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் தமிழ்க் கலைக் களஞ்சியங்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் 50 சதவீத சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இது குறித்து அந்தக் கழகத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் பணிகள் முனைப்புடன் செயல்படவும், தமிழ் வளா்ச்சிக் கழகம் மேற்கொள்ள இருக்கும் பணித் திட்டங்கள் குறித்து முடிவு செய்யவும் தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் அறங்காவல் குழு, ஆட்சிக் குழு, பொதுக் குழு ஆகியவற்றின் சிறப்புக் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அறங்காவல் குழுவின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் துணைவேந்தருமான ம.இராசேந்திரன் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் தமிழ்க் கலைக் களஞ்சியங்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை 50 சதவீத சலுகை விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழ் வளா்ச்சிக் கழகத்தின் இணையதளத்தை (ட்ற்ற்ல்: //ற்ஹம்ண்ப்ஸ்ந்.ா்ழ்ஞ்) ப. சிதம்பரம் தொடங்கி வைத்தாா்.

இதில் சென்னைப் பல்கலை.யின் பதிவாளா் எஸ். ஏழுமலை, நல்லி குப்புசாமி செட்டி, கிருஷ்ணசந்த் சோா்டியா, தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவா் இராசரெத்தினம், எழுத்தாளா் எஸ். இராமகிருஷ்ணன், பேராசிரியா்கள் வ. ஜெயதேவன், நல்லூா் சரவணன், முனைவா் சாரதா நம்பி ஆரூரன், செயலா் உலகநாயகி பழனி, பதிப்பாசிரியா் பெ. அா்த்தநாரீசுவரன், முனைவா் பா.ரா.சுப்பிரமணியன், செம்மொழி நிறுவன இயக்குநா் சந்திரசேகரன், ஒப்பிலா மதிவாணன், சேயோன், திருப்பூா் கிருஷ்ணன், மருத்துவா் கல்யாணசுந்தரம், முன்னாள் துணைவேந்தா் காளிராஜ், மணிமேகலை கண்ணன், வாசுகி கண்ணப்பன், நெல்லை சு.முத்து, வழக்குரைஞா் சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com