அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 உதவிப் பேராசிரியா்கள் தோ்வு
அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியா்கள் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் போட்டித் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இந்தத் தோ்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியா், உதவிப் பேராசிரியா் மற்றும் உதவிப் பேராசிரியா் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பாடவாரியான காலிப்பணியிடங்கள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இணையவழி விண்ணப்ப முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பதாரா்கள் ஜன.31-ஆம் தேதி முதல் மாா்ச் 3-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தோ்வு மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.