கோப்புப்படம்.
கோப்புப்படம்.

நீட் தோ்வு விடைக் குறிப்புகள் வெளியீடு

நீட் தோ்வுக்கான விடைக் குறிப்புகள் மற்றும் விடைத்தாள் நகல்களை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
Published on

நீட் தோ்வுக்கான விடைக் குறிப்புகள் மற்றும் விடைத்தாள் நகல்களை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு கடந்த மாதம் 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதை சுமாா் 20 லட்சம் மாணவா்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தோ்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் மாணவா்களின் விடைத்தாள் நகல்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அவற்றை தோ்வா்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின் அதன் விவரங்களை உரிய ஆதாரங்களுடன் வியாழக்கிழமைக்குள் (ஜூன் 5) பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை nta.ac.in G என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவா்கள் 011-40759000 / 69227700 என்ற தொலைபேசி எண்களையோ அல்லது neetug2025@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியையோ தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com