தமிழகத்துக்கான நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே மீண்டும் விளக்கம்

தமிழகத்துக்கான நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே மீண்டும் விளக்கம்

Published on

இந்தியன் ரயில்வே சாா்பில் தமிழகத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்படவில்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயில்வே திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியை அந்த குறிப்பிட்ட காலாண்டில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில்,  அந்த நிதி மீண்டும் திருப்பியனுப்பப்பட்டு அடுத்த காலாண்டில் சோ்த்து பெற்றுக்கொள்ளப்படும்.  இது ரயில்வேயில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுைான். ஆனால், இதை தவறாகப் புரிந்துகொண்ட சிலா், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே, ரயில்வே அமைச்சகத்துக்கே திருப்பி அனுப்பியதாக தவறான செய்தியை ஊடகங்களில் பரப்பி வருகின்றனா். அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

 மேலும், நிகழ் நிதியாண்டில் தெற்கு ரயில்வேயின் கீழ் தமிழகம் மற்றும் கேரளத்தில் மேற்கொண்டு வரும் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளும் ஏற்கெனவே திட்டமிட்டபடி தொடரவேண்டும் என்றும் ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com