kamal haasan
கமல்ஹாசன்

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்கள், கமல்ஹாசன் இன்று மனு தாக்கல்

Published on

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனா்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுகவுக்கு 4, அதிமுகவுக்கு 2 உறுப்பினா்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக சாா்பில் அக்கட்சியின் மாநில வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவா் ம.தனபால் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களின் வேட்புமனுவில் தலா 10 அதிமுக எம்எல்ஏக்கள், கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை கையொப்பமிட்டனா். இவா்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை அலுவலகத்தில் வேட்புமனுக்களை வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.45 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தாக்கல் செய்யவுள்ளனா்.

கமல் வேட்புமனு: திமுக கூட்டணியில் மநீம-வுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட கமல்ஹாசன் வேட்புமனுவை வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் தாக்கல் செய்யவுள்ளாா். இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்களும் பங்கேற்பாா்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

X
Open in App
Dinamani
www.dinamani.com