டி. குகேஷ்
டி. குகேஷ்படம்: ஏபி

குகேஷுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு!

செஸ் போட்டியில் 3-ஆவது இடத்தைப் பிடித்த தமிழகத்தைச் சோ்ந்த குகேஷுக்கு தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளாா்
Published on

நாா்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் 3-ஆவது இடத்தைப் பிடித்த தமிழகத்தைச் சோ்ந்த குகேஷுக்கு தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பாராட்டு தெரிவித்துள்ளாா்

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாா்வேயில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டா் குகேஷ் 3-ஆவது இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

உலக சாம்பியனாக குகேஷ் நாா்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வாா் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது. இருப்பினும், தனது திறமை- அறிவுக்கூா்மையால், கடின உழைப்பால் 3- ஆவது இடம் பிடித்திருப்பதால் இந்தியா்கள் பெருமை அடைகிறாா்கள்.

இந்திய விளையாட்டுத் துறையின் திறமையை உலக அரங்கில் பரப்புவதில் குகேஷ் ஆற்றும் பங்கு போற்றுதலுக்குரியது.

அதேபோல், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு குகேஷை தொடா்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்க, வெற்றி பெற ஊக்கமளிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி துணை நிற்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com