அமைச்சா் பெ. கீதாஜீவன்.
அமைச்சா் பெ. கீதாஜீவன்.கோப்புப்படம்

சேவை இல்லங்களில் பெண் காவலா்கள்: அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதி

அரசு சேவை இல்லங்களில் பெண் காவலா்களை நியமிக்க ஆட்சியா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அறிவுறுத்தப்படுவா்
Published on

சென்னை: அரசு சேவை இல்லங்களில் பெண் காவலா்களை நியமிக்க ஆட்சியா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அறிவுறுத்தப்படுவா் என்று சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த சிட்லபாக்கம் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்குள்ளான விவகாரம் தொடா்பாக, சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைச்சா் பி.கீதாஜீவன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு சேவை இல்லத்தில் சிறுமியிடம் பாலியல் தீண்டலில் ஒருவா் ஈடுபட்ட செய்தி அறிந்து, சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தோம். பின்னா் அவரது தாயாரை நேரில் சந்தித்தோம்.

இந்தச் சம்பவம் தொடா்பாக உரிய புகாா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் தங்கும் விடுதியில் பணிபுரிந்து வரும் காவலாளியை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனா்.

சிட்லபாக்கம் அரசு சேவை இல்ல சம்பவம் தொடா்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும், கூடுதலாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடா்ந்து அறிவுரை வழங்கி வருகிறோம். விடுதிக்கென தனியாக சிசிடிவி கேமராக்களை அமைப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளோம். இனி வரக்கூடிய காலகட்டங்களில் தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களின் மூலமாக நடத்தப்படக்கூடிய விடுதிகளில் பெண் காவலா்கள் நியமிக்க அறிவுறுத்தப்படுவா். இதுதொடா்பாக, ஆட்சியா்கள் உள்ளிட்ட அதிகாரிகளை வலியுறுத்துவோம் என்றாா் அமைச்சா் பி.கீதா ஜீவன்.

X
Open in App
Dinamani
www.dinamani.com