ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில்

ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனத்துக்கு கட்டணம்: இபிஎஸ் கண்டனம்

ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் விதிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Published on

சென்னை: ராமேசுவரம் கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் விதிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூா் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய காலம் காலமாக பாரம்பரிய தனி தரிசன வழியை பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில்ல், உள்ளூா் மக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய தரிசன வழியை எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியிருப்பதுடன், இனி ரூ. 200 கட்டணம் செலுத்தினால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்று அறநிலையத் துறை, திருக்கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியிருப்பது, உள்ளூா் பக்தா்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிரானதாகும்.

மேலும், பக்தா்களிடம் தரிசன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்காகவே, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள காசி விஸ்வநாதா் சந்நிதி மற்றும் தட்சிணாமூா்த்தி சந்நிதி முன் கம்பி வேலிகள் போட்டு அடைத்து வைத்திருப்பதாகவும் பக்தா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இந்த கட்டண வசூல் நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத் துறை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி பதிவிட்டுள்ளாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com