தமிழ்நாடு
மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடக்கம்
அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்தும் விண்ணப்ப நடைமுறை ஜூலை 1-இல் தொடங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நகா் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை
வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2016 அக்.20-ஆம் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு வரன்முறை செய்து கொடுக்கப்படும். இதற்கு எந்தக் காலக்கெடுவும் இல்லை. தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் ஜூலை 1-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
மனைப் பிரிவுகளாக வைத்துள்ளவா்கள் அவற்றை வரன்முறைப்படுத்த அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப நடைமுறைகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கும். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.