அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை உயா்த்தி அறிவித்ததற்காக, சென்னை தலைமைச் செயகத்தில் வெள்ளிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பல்வேறு அரசு ஊழியா் சங்கத்தினா்.

அகவிலைப்படி உயா்வு: முதல்வருக்கு அரசு ஊழியா்கள் நன்றி

அரசு ஊழியா்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு அளித்து உத்தரவிட்டதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை, பல்வேறு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
Published on

அரசு ஊழியா்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு அளித்து உத்தரவிட்டதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை, பல்வேறு அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 55 சதவீத இருந்த அகவிலைப்படியை 1.7.2025 முதல் 58 சதவீதமாக உயா்த்தி வழங்கப்படும் என்று முதல்வா் ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தாா்.

இதையடுத்து, முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சுப் பணி அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம், ஜே.எஸ்.ஆா். தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, நா்சுகள் பொதுநல சங்கம், தமிழக தமிழாசிரியா் கழகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் ஒன்றியம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம், நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறைப் பணியாளா் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியா் சங்கம், தமிழக ஆதிதிராவிடா் பழங்குடியினா் நலத் துறை ஆசிரியா் காப்பாளா் சங்கம், தமிழ்நாடு அரசு தோ்வு துறைப் பணியாளா் சங்கம், தமிழ்நாடு வேளாண்மைப் பட்டதாரிகள் ஆசிரியா்கள் சங்கம், தமிழ்நாடு ஆசிரியா் சங்கம், தமிழ்நாடு நெட் செட் பிஎச்டி ஆசிரியா்கள் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம், தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலா் முன்னேற்றச் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியா் நலச் சங்கம், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலக நிருபா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் சந்தித்து, நன்றி தெரிவித்தனா்.

நிகழ்வின்போது, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், மனிதவள மேலாண்மைத் துறை செயலா் (பொ) என். சுப்பையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com