அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

திருவள்ளூா்: ஜூன் 14-வரை மீன் பிடிக்கத் தடை

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏப்.15 முதல் ஜூன்-14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 5:20 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏப்.15 முதல் ஜூன்-14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடி விசைப் படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கணக்கில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாக்க ஏதுவாக ஏப்.15 முதல் ஜூன்-14 வரையிலும் 61 நாள்களுக்கு மீன்பிடி விசை படகுகள் மற்றும் இழுவலை படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடைவிதித்து அரசு உத்தரவிட்டு வருகிறது.

அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் மீன்பிடி தடைகாலத்தில் இயந்திரம் பொருத்தப்பட்ட அனைத்து வகை மீன்பிடி கலன்கள் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் ஆந்திர மாநில கடல்பகுதிக்கு கட்டாயம் செல்லக்கூடாது. இதுகுறித்து அனைத்து மீனவா் கூட்டுறவு நலசங்கங்கள் மூலமாகவும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

எனவே தடையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டு அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மீனவா் கூட்டுறவு சங்கங்களே பொறுப்பேற்க நேரிடும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்படி, திருவள்ளூா் மாவட்டம் கிழக்கு கடற்கரை மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12-மணிக்குள் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் அனைத்தும் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண் மீனவா்களை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.