சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு தடை: டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை விதிக்கப்பட்டது பற்றி...

tasmac

டாஸ்மாக் - பிரதிப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:51 am IST

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்பனை செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ - FSSAI) நடத்திய சோதனையில் என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 10 பிராந்தி வகைகள் மற்றும் ஒரு ரம் வகையில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து 11 வகை மதுபானங்களையும் மறுஉத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மதுபானங்களை கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தயாரிப்புகளை நிறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவுறுத்தல்களை விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு உடனடியாக வழங்குமாறு மண்டல மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

என்னென்ன பிராண்டுகள்?

  1. VSOP EXSHAW GOLD BRANDY - விஎஸ்ஓபி எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி

  2. LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY - லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி

  3. Mc Dowells VSOP Brandy (Blended Brandy) - மெக்டொவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி (பிளெண்டட் பிராந்தி)

  4. NO.1 McDowells Fine Brandy (Indian Brandy) - நெ.1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி (இந்திய பிராந்தி)

  5. MENSCLUB Deluxe Brandy (Indian Brandy) - மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி (இந்திய பிராந்தி)

  6. HONEY BEE FINE Brandy (Indian Brandy) - ஹனி பீ ஃபைன் பிராந்தி (இந்திய பிராந்தி)

  7. ENRICA VSOP SELECT BRANDY - என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி

  8. ENRICA PLATINUM RESERVE XO BRANDY - என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி

  9. ENRICA PREMIUM FRENCH BRANDY - என்ரிகா பிரீமியம் பிரெஞ்சு பிராந்தி

  10. VEERAN SPECIAL BRANDY - வீரன் ஸ்பெஷல் பிராந்தி

  11. ENRICA OLD INDIE CLASSIC DARK RUM - என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம்

Summary

Ban on the sale of 11 types of liquor at TASMAC shops! Which brands are they?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.