
10 வேளாண் பொருள்களுக்குப் புவிசார் குறியீடு பெறப்படும்! வேளாண்மைத் துறை அறிவிப்புகள்!
வேளாண்மைத் துறை அறிவிப்புகள் சார்பில் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து...

வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் - படம்: சட்டப்பேரவை
சட்டப்பேரவையில் இன்று(ஆக. 31) உழவர் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் திங்கள்கிழமை பேரவைக் கூடியது. இதையடுத்து, 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலைகள் குறித்த கவன ஈர்ப்புத் தீா்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது, உழவர் மற்றும் வேளாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு அமைச்சர் வினோத் பதிலளித்து, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
* விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளின் தரம் குறையாமல் சேமித்து வைத்து அவற்றைப் பாதுகாத்திட தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தருமபுரி, சேலம், திருப்பூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 11 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதியில் ஒன்பது புதிய விதை சேமிப்புக் அமைக்கப்படும். கிடங்குகள்
* விவசாயிகளுக்குத் தரமான வேளாண் இடுபொருள்கள் அருகில் கிடைத்திட ஏதுவாக, திருவாரூர், தருமபுரி, ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விதை சேமிப்புக் கிடங்குடன் கூடிய நான்கு புதிய துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள், 2 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.
* மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி-1 சர்க்கரை ஆலை மற்றும் திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி சர்க்கரை ஆலை ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நவீன சுழல் வடிவ கரும்பு பிரிதிறன் இயந்திரம் மற்றும் மின்மோட்டார்கள் 8 கோடியே 58 லட்சம் ரூபாய் நிதியில் நிறுவப்படும்.
* தேனீ வளர்ப்பினை ஊக்குவித்து விவசாயிகளின் வருவாயைப் பெருக்க ரூ. 6 கோடியே 84 லட்சம் நிதியில் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் மற்றும் தேன் பிழியும் கருவிகள் வழங்கப்படும்.
* வேளாண்மைப் பொறியியல் துறையின் 7 இயந்திரக் கலப்பைப் பணிமனைகளை நவீனமயமாக்குதல், திருவள்ளூரில் புதிய அரசு இயந்திரக் கலப்பைப் பணிமனை அமைத்தல், புதுமையான வேளாண் இயந்திரங்கள், கருவிகளை அரசு இயந்திரக் கலப்பைப் பணிமனைகளில் உருவாக்குதல் ஆகிய திட்டங்கள் 90 லட்சம் ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்படும்.
* தமிழ்நாட்டிலுள்ள 285 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வருவாயினை மின்னணுமுறையில் சேகரிக்க மொத்தம் 600 விற்பனை முனையக் கருவிகள் (Point of Sale Machines) வழங்கப்படும்.
* காஞ்சிபுரம் பரிமிளகாய், பொய்யூர் கத்திரி, சிதம்பரம் உளுந்து, கடுக்காய், திருவையாறு கருமந்துறை இலைவாழை, எறையூர் கருணைக்கிழங்கு, கடலூர் வெட்டிவேர், மணப்பாறை கத்திரிக்காய், ஊட்டி பூண்டு மற்றும் ஜவ்வாது பேய் எள் ஆகிய 10 வேளாண் பொருள்களுக்குப் புவிசார் குறியீடு பெறப்படும்.
* வெற்றிலை சாகுபடியில் உற்பத்தியையும் இலைத் தரத்தையும் உயர்த்தி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க ரூ. 30 லட்சம் நிதியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* பாசன வசதியுள்ள பகுதிகளில் அதிக காரத்தன்மையுடைய மிளகாய் ரகங்களின் சாகுபடி, ரூ. 60 லட்சம் நிதியில் சோதனை அடிப்படையில் ஊக்குவிக்கப்படும்.
* நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் 5 நாள்கள் பயிற்சி பொறியியல் தொடர்பான 300 படித்த இளைஞர்களுக்கு வழங்கப்படும்.
Summary
New announcements regarding the farmers and the agriculture sector were made in the Legislative Assembly today (August 31).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


கால்நடை காவலன் விருது... கால்நடை பராமரிப்புத் துறைக்கு வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகள்!

வாட்ஸ் ஆப்பில் நுகர்வோர் சேவை, முக அங்கீகார வசதி... உணவுத்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!




