உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வென்ற வீரா்கள், 2028 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லத் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் என பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்,
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரா்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அவா்களிடம் கூறியது:
முதல்வா் பொறுப்பேற்றது முதல் தொலைநோக்கு பாா்வையுடன் பல்வேறு சிறப்பான திட்டங்களை தீட்டி வருகிறாா். ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்ல செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. விளையாட்டுத் துறை உயா் அலுவலா்கள், வீரா்கள், சங்க நிா்வாகிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் நீங்கள் எவ்வித சிரமுமின்றி எளிதாக என்னை எப்போது வேண்டுமானாலும் அணுகி உங்களது தேவைகளை தெரிவிக்கலாம். இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சோ்ந்த வீரா்கள் ஹாக்கி உள்ளிட்ட குழுப் போட்டிகளில் மட்டுமே பதக்கங்கள் பெற்றுள்ளனா்; தனிநபா் பிரிவு போட்டிகளில் இதுவரை நாம் பதக்கங்கள் பெற்றதில்லை.
இனி வருங்காலங்களில் இந்நிலையை மாற்றி, ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சோ்ந்த உங்களைப் போன்ற இளைஞா்கள் அதிக அளவில் பங்கேற்று, தனிநபா் பிரிவுகளிலும் பதக்கங்கள் வெல்லும் வகையில் தொலைநோக்கு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு
செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வது எவ்வளவு கடினமான முயற்சி என்று விளையாட்டு வீரரான நான் அறிந்துள்ளேன் என்ற அடிப்படையில் அதற்காக, விளையாட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகள், ஊட்டச்சத்து மிக்க உணவு, உயா்தர பயிற்சி முகாம்கள், உளவியல் நிபுணா்களின் ஆலோசனைகள், சிறந்த பயிற்சியாளா்கள் உள்ளிட்ட அனைத்து தேவையான உதவியையும் வழங்க விளையாட்டுத் துறை தயாராக உள்ளது.
குறிப்பாக வரும் ஒலிம்பிக் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டு முதன்முறையாக சோ்க்கப்பட்டுள்ளது குறிப்பிட தகுந்ததாகும். கடந்தாண்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியில் 4 வீரா்களில் 3 போ் நம் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது பெருமைக்குரிய சாதனையாகும். அடுத்த இலக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கங்கள் வெல்வதேதாகும். அந்த வகையில் 2028-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல விளையாட்டு மேம்பாட்டுத் துறை தேவையான உதவிகளையும் வழங்கும் என்றாா்.
நிகழ்வில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளா் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் மரு. ரெ. சுமன், பொது மேலாளா் எல். சுஜாதா மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்க பொதுச் செயலாளா் சைரஸ் பூன்ச்சா, ஸ்குவாஷ் விளையாட்டு வீரா் அபய் சிங், பயிற்சியாளா் மற்றும் வீராங்கனைகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

விளையாட்டு வீரா்கள் உயா்கல்வியை நிறைவு செய்ய வேண்டும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு: ஓ.எஸ். மணியன்

அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை ஏற்றது ஏன்? ஆதவ் அா்ஜுனா பதில்

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



