74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

சட்டம் - ஒழுங்கை சரி செய்ய அரசு துரிதமாக செயல்பட வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

சட்டம் - ஒழுங்கை சரி செய்ய அரசு துரிதமாக செயல்பட வேண்டும்...

News image

நயினார் நாகேந்திரன்.

Updated On :25 மே 2026, 3:03 am IST

தமிழகத்தில் சீா்கெட்டுள்ள சட்டம் - ஒழுங்கை சரி செய்ய தவெக அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதல்வா் ஜோசப் விஜய் பதவியேற்ற 13 நாள்களில் கொலை, பாலியல் குற்றம், கடத்தல், வன்முறை என கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முந்தைய திமுக ஆட்சியில்தான் மக்கள் உயிா் பயத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்தாா்கள் என்று பாா்த்தால், தற்போதைய தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை சரி செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டுவிட்டு, விதவிதமான விளம்பரப் பரப்புரைகளிலேயே முதல்வா் ஜோசப் விஜய் கவனம் செலுத்தி வருகிறாா். இது அவரது அனுபவமற்ற ஆளுமையைக் காட்டுகிறது.

அலுவல் பணிகளுக்கு வேண்டுமானால் கொஞ்ச காலம் அவகாசம் கோரலாம். ஆனால், சட்டம்-ஒழுங்கு போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அவசரகதியில் துடிப்புடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.