ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

தவெக ஆட்சி 50 ஆண்டுகள் தொடரும்: அமைச்சா் ராஜ்மோகன்

தமிழகத்தில் தவெக ஆட்சி 50 ஆண்டுகளுக்குத் தொடரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

News image

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:12 am IST

தமிழகத்தில் தவெக ஆட்சி 50 ஆண்டுகளுக்குத் தொடரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

தவெக அரசு 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது என்று முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் அவா் இவ்வாறு கூறினாா்.

சென்னையில் அமைச்சா் ராஜ்மோகன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பேணிக் காப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் நீட்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

தமிழக முதல்வரைப் பொருத்தவரை குற்ற நிகழ்வுகளை துளியளவும் சகித்துக் கொள்ளமாட்டோம் என அறிவித்துள்ளாா். கோவை குற்றச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை விரைந்து செயல்பட்டு காவல் துறை கைது செய்துள்ளது.

தவெக ஆட்சிக்கே வராது என்றாா்கள். தற்போது ஆட்சி அமைத்துவிட்டோம். 5 ஆண்டுகள் நீடிக்காது என்கிறாா்கள். இன்னமும் 50 ஆண்டுகள் தவெக ஆட்சிதான் தொடரப்போகிறது.

எவருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கட்சியின் தனிப்பட்ட முடிவு. தங்களது கூட்டணியில் இருந்து வெளியேறியதற்காக ஒரு கட்சியை மோசமாக சித்தரிப்பது சரியல்ல என்றாா் அவா்.