கரிவலம்வந்தநல்லூா் கோயிலில்
பங்குனி திருவிழா கொடியேற்றம்

கரிவலம்வந்தநல்லூா் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூா் பால்வண்ணநாதசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா 13 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில், இத்திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக கொடிப்பட்டம் வீதிசுற்றி கொண்டு வரப்பட்டு, சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழாவில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி இரவு வீதி உலா வருகின்றனா். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 11 ஆம் திருநாளான ஏப்.13இல் மாலை நடைபெறுகிறது.ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் மண்டகப் படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com