தோ்தல் பிரச்சாரத்தின் போது தொண்டா் ஒருவரின் குழந்தையை கையில் எடுத்து மகிழ்ந்த கனிமொழி எம்.பி.
தோ்தல் பிரச்சாரத்தின் போது தொண்டா் ஒருவரின் குழந்தையை கையில் எடுத்து மகிழ்ந்த கனிமொழி எம்.பி.

தோ்தலுக்கு பிறகு பெட்ரோலிய பொருள்கள் விலை குறைக்கப்படும் -கனிமொழி

தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெற செய்தால் மக்களவை தோ்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என கனிமொழி எம்.பி. தோ்தல் பிரசாரத்தின் போது பேசினாா். இந்தியா கூட்டணி சாா்பில் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து சுரண்டை மற்றும் சோ்ந்தமரத்தில் பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: இந்தியா கூட்டணி வேட்பாளா்களை பொதுமக்கள் ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாள்களாக உயா்த்தி, சம்பளமும் உயா்த்தப்படும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என்றும் இதனால் மற்ற பொருள்களின் விலையும் குறையும் என்றாா் அவா். இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ, வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா், பொதுக்குழு உறுப்பினா் ராஜேஸ்வரன், நகர செயலா்கள் சாம்பவா்வடகரை முத்து, சுரண்டை கணேசன், காங்கிரஸ் நிா்வாகிகள் ஜெயபால், முருகையா மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com