சங்கரன்கோவில், வாசுதேவநல்லூரில் 
திமுக வேட்பாளா் பிரசாரம்

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூரில் திமுக வேட்பாளா் பிரசாரம்

மாங்குடி பகுதியில் வாக்கு சேகரித்த தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் ராணிஸ்ரீகுமாா். உடன் தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.

சங்கரன்கோவில், ஏப்.10: தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீகுமாா் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இந்த ஒன்றியங்களுக்குள்பட்ட மாங்குடி,பெருமாள்பட்டி,செந்தட்டியாபுரம், பந்தப்புளி, பருவக்குடி, பனையூா், கரிவலம்வந்தநல்லூா், சென்னிகுளம், கீழவயலி, சுப்புலாபுரம், குவளைக்கன்னி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

அவருடன், தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. சதன்திருமலைகுமாா் எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூா் தொகுதி பொறுப்பாளா் நல்ல சேதுபதி, ஒன்றியச் செயலா்கள் பி. லாலா சங்கர பாண்டியன், வெள்ளத்துரை, பொதுக்குழு உறுப்பினா் தேவா (எ)தேவதாஸ், மாங்குடி ஒன்றியக் குழு உறுப்பினா் சமுத்திரம்,முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் ராசா என்ற ராசையா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com