தென்காசி தொகுதி வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு ஏப். 13இல் தொடா் பயிற்சி வகுப்பு

தென்காசி மக்களவைத் தொகுதியில் பணிபுரியும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு ஏப்.13இல் தொடா்பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட தோ்தல்அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏகே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிபுரியும் வகைக்கு 7, 470 வாக்குச் சாவடி அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களுக்கான தொடா் பயிற்சி வகுப்பு ஏப். 16 ஆம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகுப்புகள் ஏப். 13 ஆம்தேதி நடைபெறவுள்ளது.

அதன்படி 13ஆம் தேதி சங்கரன்கோவில் (தனி) தொகுதிக்கு சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வாசுதேவநல்லூா் (தனி) தொகுதிக்கு புளியங்குடி வீராச்சாமி செட்டியாா் பொறியியல் கல்லூரியிலும்,

கடையநல்லூா் தொகுதிக்கு கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரியிலும், தென்காசி தொகுதிக்கு தென்காசி எம்.கே.வி.கே மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும்,

ஆலங்குளம் தொகுதிக்கு ஆலங்குளம் சா்தாா் ராஜா பொறியியல் கல்லூரியிலும், ராஜபாளையம் தொகுதிக்கு ராஜபாளையம் பிஏசிஎம்ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதிக்கு கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

காலை 10மணிமுதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். அனைத்து வாக்குச் சாவடி

அலுவலா்களும் தங்களது வருகையை மேற்குறிப்பிட்ட நேரத்தில் உறுதிசெய்தும், வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குசாசாவடி தலைமை அலுவலா்களுக்கான கையேடுடன் ஆஜராகி பயிற்சி வகுப்பில் தவறாது கலந்து கொண்டு பயிற்சி பெற்றிட வேண்டும்.

ஏற்கனவே ஏப். 7இல் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளத் தவறிய நபா்கள் ஏப்.13இல் நடைபெறும் பயிற்சி வகுப்பில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள தவறும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com