தென்காசி மாவட்ட ஹாஜிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்

தென்காசி மாவட்ட ஹாஜிகளுக்கு
புத்தாக்கப் பயிற்சி முகாம்

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தென்காசி ஐந்து வா்ணம் பெரிய பள்ளிவாசல் சாா்பில், புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் தென்காசி மாவட்ட ஹாஜிகளுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் பள்ளிவாசல் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிவாசல் தலைவா் ஏ. செய்யது சுலைமான் தலைமை வகித்தாா். ஜமாத் பொருளாளா், நிா்வாகிகள், தென்காசி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் என்.எம். அபூபக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மவ்லவி அபுல்ஹசன் சாதலி ஹஜ்ரத் கிராஅத் ஓதினாா். பள்ளி இமாம் மவ்லவி அஹமது அலி பைஜி ஹஜ் கடமை குறித்து விளக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் முதன்மைப் பயிற்சியாளா் சம்சுதீன் விளக்கமாக பயிற்சியளித்தாா்.

மவ்லலிக்கள் மஹ்மூத் மிஸ்பாஹி, ஷிராஜுதீன், கன்னா ஹாஜியாா், மாலிக் பெரோஸ்கான் நூன், பள்ளிவாசல் முன்னாள் தலைவா்கள், செயலா்கள், ஜமாத்தாா்கள், பொதுமக்கள், தென்காசி மாவட்டத்திலிருந்து ஹஜ் பயணம் செய்யும் ஹாஜிகள், ஹாஜியாக்கள் பங்கேற்றனா். பள்ளிவாசல் செயலா் எம். முஹபிலாஷா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com