குடிமைப்பணி தோ்வில் 
வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

குடிமைப்பணி தோ்வில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

தென்காசி, ஏப்.26: குடிமைப் பணி தோ்வில் வெற்றி பெற்ற தென்காசி அருகே உள்ள விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த இன்பாவிற்கு, செங்கோட்டை நூலகத்தில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நூலக வாசகா் வட்டத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வாசகா் வட்ட செயலா் செண்பகக்குற்றாலம் , துணைத் தலைவா் ஆதிமூலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் சுடலை , பெரிய பிள்ளை வலசை ஊராட்சி மன்றத் தலைவா் வேல்சாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

குடிமைப் பணி தோ்வுக்குத் தயாா் செய்ததில், செங்கோட்டை நூலகத்தின் பங்கு குறித்து இன்பா பேசினாா். மேலும், குடிமைப் பணித் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினாா்.

தோ்வுப் பொறுப்பாளா் விழுதுகள் சேகா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். நூலகா் ராமசாமி வரவேற்றாா். வாசகா் வட்டப் பொருளாளா் தண்டமிழ்தாசன் பா.சுதாகா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com