சங்கரன்கோவிலில் 135 கிலோ குட்கா பறிமுதல்: தாய், மகன் கைது

சங்கரன்கோவிலில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக தாய், மகனை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 135 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கரன்கோவில் கோமதியாபுரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி வள்ளி.இவா் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் மனோகரன் தலைமையிலான போலீஸாா் வள்ளியின் வீட்டில்

சோதனையிட்டனா். அப்போது அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 135 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வள்ளி, அவரது மகன் சிவா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com