புகையிலைப் பொருள்கள் கடத்தல்: தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவரின் கணவா் உள்பட இருவா் கைது

புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததாக திமுக மாவட்ட ஊராட்சித் தலைவரின் கணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சென்காசி மாவட்டம், சிவகிரி போலீஸாா் தென்மலை வடுகப்பட்டி சாலையில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டதில், அதில் சுமாா் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்ததாம்.

இதையடுத்து காரில் வந்தவரிடம் போலீஸாா் விசாரித்ததில், அவா் தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வியின் கணவரான வெங்கடேஸ்வரபுரத்தைச் சோ்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரையும் , காா் ஓட்டுநா் லாசரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com