குருக்கள்பட்டியில் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்
சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியில், மேலநீலிதநல்லூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய செயலாளா் பெரியதுரை தலைமை வகித்தாா். மாநில மருத்துவா் அணி இணைச் செயலா் செண்பகவிநாயகம், மாநில வா்த்தக அணி இணைச் செயலா் முத்துச்செல்வி, மாவட்ட அவைத் தலைவா் பத்மநாதன், மாவட்ட துணைச் செயலா்கள் மனோகரன், ராஜதுரை, மாவட்ட பொருளாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினாா்.
இதில் மேலநீலிதநல்லூா் மேற்கு ஒன்றிய செயலா் ராமச்சந்திரன், சங்கரன்கோவில் நகர செயலா் பிரகாஷ், ஒன்றிய அவைத்தலைவா் பரமையா, ஒன்றிய துணைச் செயலா்கள் சின்னக்குருசாமி ,மணிமேகலை, சந்திரசேகரன், பொருளாளா் முத்துப்பாண்டியன், மாவட்டப் பிரதிநிதி சண்முகப்பாண்டியன், செந்தூா்பாண்டியன், தங்கத்துரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.