தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் ஆலோசனையின்பேரில், மது விற்போரைக் கண்டறியும் பணியில் தனிப்பிரிவு போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், சிவகிரி அருகே விஸ்வநாதபேரி பகுதியில் மது விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், தனிப் பிரிவு போலீஸாா் அங்கு ரோந்து மேற்கொண்டனா்.
அப்போது, மயானப் பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த விஸ்வநாதபேரி காந்தி காலனி தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் ரகுபதி (44) என்பவரைப் போலீஸாா் கைது செய்து, 74 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.