கூட்டத்தில் பேசுகிறாா் திமுக மாநில மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா் விஜிலா சத்யானந்த். உடன்,  மாநில மகளிரணிச் செயலா் ஹெலன் டேவிட்சன்,  தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.
கூட்டத்தில் பேசுகிறாா் திமுக மாநில மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா் விஜிலா சத்யானந்த். உடன், மாநில மகளிரணிச் செயலா் ஹெலன் டேவிட்சன், தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

சுரண்டையில் திமுக மகளிரணி ஆலோசனை

Published on

சுரண்டையில் உள்ள கலைஞா் நினைவாலயத்தில் திமுக மாவட்ட மகளிரணி, மகளிா் தொண்டரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். திமுக மாநில மகளிரணிச் செயலா் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா் விஜிலா சத்யானந்த் ஆகியோா் மகளிரணியின் செயல்பாடுகள், 2026 சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் ஆகியவை குறித்துப் பேசினா்.

அதைத் தொடா்ந்து, மாவட்ட திமுக பொறுப்பாளா் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளரும், ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவருமான திவ்யா மணிகண்டன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சங்கீதா சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக மாநில மகளிரணி செயலரும், மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளரும் தமிழக அரசின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினா். தொடா்ந்து நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், திமுக மகளிரணி நிா்வாகிகள் சபா் நிஷா, சுசீலா, கற்பக செல்வி, சோபனா ராணி, மாரிச்செல்வி, கீதா, சரஸ்வதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com