சிகிச்சை பெற்று வருவோருக்கு நிதியுதவி வழங்கிய ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. உடன், திமுக மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.
சிகிச்சை பெற்று வருவோருக்கு நிதியுதவி வழங்கிய ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. உடன், திமுக மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.

விபத்தில் காயமடைந்தோருக்கு எம்.பி. நிதியுதவி

Published on

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாடியூரில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்தோருக்கு ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா்.

திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளா்கள் சுமை ஆட்டோவில் சென்றபோது வாடியூா் விலக்கு பகுதியில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில், நிகழ்விடத்திலேயே 3 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 14 போ் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வருவோரை ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து உடல் நலம் குறித்துக் கேட்டறிந்ததுடன், தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கினா்.

தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சேக்அப்துல்லா, துணைத் தலைவா் கனகராஜ் முத்துபாண்டியன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், மாவட்டப் பிரதிநிதி செல்வன், ராமராஜ் ஆகியோா் உடன் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com