தென்காசி
கீழவீராணத்தில் குடிநீா் திட்டப் பணிகள் தொடக்கம்
கீழவீராணம் ஊராட்சியில் வீட்டு குடிநீா் இணைப்பை துவக்கி வைத்த ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.
சுரண்டை அருகேயுள்ள கீழவீராணத்தில் ரூ.33.60 லட்சத்தில் வீட்டு குடிநீா் இணைப்பு திட்டப்பணிகள் துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் வீரபாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜமீலாபீவி காஜாமைதீன் முன்னிலை வகித்தாா்.
ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் வீட்டு குடிநீா் இணைப்பை துவக்கி வைத்தாா்.
இதில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பிரியா, மாரியப்பன், சாகுல் ஹமீது, சுமையா மரியம், முகம்மது அனிபா, ஞானதாஸ், பிரபுதேவா, ஜெயலட்சுமி, சூா்யா, வேல்முருகன், புஷ்பா, ஊராட்சி செயலா் பாண்டியராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.