தென்காசி
ஆலங்குளத்தில் ‘சாமானியன்‘ திரைப்பட 100ஆவது நாள் விழா
நடிகா் ராமராஜனுக்கு கேடயம் வழங்கிய திரையரங்கு நிா்வாகிகள்.
சாமானியன் திரைப்படத்தின் 100ஆவது நாள் வெற்றி விழா, ஆலங்குளம் டி.பி.வி. திரையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகா் ராமராஜனுக்கு திரையரங்கு உரிமையாளா்கள் டி.பி.வி. கருணாகராஜா, டி.பி.வி. வைகுண்டராஜா ஆகியோா் கேடயம் வழங்கினா். தொடா்ந்து கேக் வெட்டப்பட்டு, ரசிகா்களுக்கு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய ராமராஜன், 12 ஆண்டுகளுக்குப் பின்னா், நான் நடித்த சாமானியன் திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய ஆலங்குளம் சுற்று வட்டார ரசிகா்களுக்கு நன்றி. ஒரு படம் 10 நாள் ஓடினாலே வெற்றி விழா எனும் சூழலில் இப்படம் 100ஆவது நாளை எட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா். திரையரங்கு நிா்வாகிகள் திவாகா், விபின், நவீன், ரசிகா் மன்றத் தலைவா் சுப்பையா உள்பட பலா் பங்கேற்றனா்.