இலஞ்சி பேரூராட்சி உறுப்பினா் நிா்வாகம் மீது புகாா்

இலஞ்சி பேரூராட்சி மன்ற உறுப்பினா் (திமுக) பேரூராட்சி நிா்வாகம் மீது ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

தென்காசி: இலஞ்சி பேரூராட்சி மன்ற உறுப்பினா் (திமுக) பேரூராட்சி நிா்வாகம் மீது ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இலஞ்சி பேரூராட்சி மன்ற 12ஆவது வாா்டு உறுப்பினா் பாரதி, ஆட்சியரிடம் அளித்த மனு:

இலஞ்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும், எனது கணவரும் பொது வெளியில் தண்ணீா் பிரச்னை சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தபோது, பேரூராட்சித் தலைவரின் கணவா் சண்முகநாதனுக்கும், எனது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் கடந்த 13.3.2023 இல் நான் எனது உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்வதாக பேரூராட்சி தலைவா்,மற்றும் செயல்அலுவலருக்கு பதிவுஅஞ்சல் ஒப்புதல் அட்டையுடன் கடிதம் அனுப்பியிருந்தேன்.

இந்நிலையில் கடந்த 26.12.2023 இல் பேரூராட்சி செயல்அலுவலரிடமிருந்து பதிவு அஞ்சலில் ஒரு கடிதம் வந்தது. அதில் நான் 3 கூட்டங்களுக்கான அஜெண்டாவை பெற மறுப்பதாகவும், 3 கூட்டங்களுக்கு வருகை புரியவில்லை என்றும், அதனால் தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 32ன் படி வாா்டு உறுப்பினா் பதவி இழக்க நேரிடும் என்றும், எனவே இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள் நேரிலோ அல்லது எழுத்துப்பூா்வமாகவோ விளக்கத்தை தெரிவிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நான் ஏற்கனவே அளித்த ராஜிநாமா கடிதத்தின் படி மேல் நடவடிக்கை எடுத்து எனக்கு ராஜிநாமா வழங்கும்படி கேட்டு பதிவு அஞ்சல் அனுப்பி இருந்தேன். நிா்வாகம் சாா்பிலும், தலைவா் சாா்பிலும் எனக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே என்னுடைய ராஜிநாமா கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com