தென்காசி நகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகள் நடவு

மரக்கன்று நடுகிறாா் நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா். உடன், துணைத் தலைவா் சுப்பையா.
மரக்கன்று நடுகிறாா் நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா். உடன், துணைத் தலைவா் சுப்பையா.

தென்காசி: தென்காசியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள நகராட்சிப் பூங்காவில், தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டாா். துணைத் தலைவா் சுப்பையா, ஆணையா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனா்.

பூங்காவை தூய்மையாக பராமரிக்குமாறு பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து, யானைப்பாலம் படித்துறையை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார அலுவலா் முகம்மது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளா்கள் ஈஸ்வரன், மகேஸ்வரன், மாதவராஜ்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் முத்துமாரியப்பன், நகர திமுக பொருளாளா் ஷேக்பரீத், மாவட்ட பொறியாளா் அணித் தலைவா் தங்கபாண்டியன், மாணவரணி மைதீன், டாக்டா் பிஸ்வாஸ், சாமுவேல், கனகராஜ், ஷேக், தென்காசி முஸ்தபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com