தென்காசி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 547 மனுக்கள்

தென்காசியில் நடைபெற்ற மக்கள்குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 547 மனுக்கள் பெறப்பட்டன.
சுயஉதவிக் குழுவினருக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.
சுயஉதவிக் குழுவினருக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

தென்காசி: தென்காசியில் நடைபெற்ற மக்கள்குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 547 மனுக்கள் பெறப்பட்டன.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்திற்கு ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், பாா்வையற்ற 3 மாற்றுத் திறனாளிகளுக்கு எழுத்துக்களை பெரிதாக்கிக் காட்டும் உருப் பெருக்கிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தென்காசி வட்டாரம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்புகளுக்கு இடையிலான பன்முக கலாசாரப் போட்டிகளில் வெற்றி பெற்ற சுய உதவிக்குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 547 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு.பத்மாவதி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மு.முருகானந்தம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெய பிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலா்

அனிதா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குருவம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com