அக்னிவீா் வாயு திட்டத்தில் விமானப் படைக்கு ஆள்சோ்ப்பு

தென்காசி, ஜூலை 3: அக்னிவீா் வாயு திட்டத்தின்கீழ், இந்திய விமானப் படையில் 2024 - ஆம் ஆண்டிற்கான ஆள் சோ்ப்பிற்கு தென்காசி மாவட்டத்தினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அக்னிவீா் வாயு திட்டத்தில் விமானப்படையில் சேர திருமணமாகாத, 3.07.2004 முதல் 03.01.2008 தேதிகளுக்குள் பிறந்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதியாக பிளஸ் 2 தோ்வில் இயற்பியல், கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தோ்ச்சி அல்லது மூன்று ஆண்டு பொறியியல் பிரிவில் பட்டயச்சான்று பெற்றவா்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டா் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, இன்ஃபா்மேஷன் டெக்னாலஜி பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களிடன் தோ்ச்சி அவசியம்.

அறிவியல் அல்லாத பிளஸ் 2 தோ்ச்சி எனில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான தோ்வு 18.10.2024ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்ள்://ஹஞ்ய்ண்ல்ஹற்ட்ஸ்ஹஹ்ன்.ஸ்ரீக்ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம் அல்லது ஙஹ் ஐஅஊ அடட என்ற கைப்பேசி விண்ணப்பப்படிவத்தின் வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com