சுரண்டை பள்ளியில் மரம் நடும் விழா

சுரண்டை பள்ளியில் மரம் நடும் விழா

சுரண்டை, ஜூலை 4: பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில் குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குற்றாலம் சாரல் ரோட்டரி சங்க தலைவா் டாக்டா் முத்துராமன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் ஹெலன் கிருபா முன்னிலை வகித்தாா்.

சுரண்டை முத்துலட்சுமி மருத்துவமனை மருத்துவா் கே.முருகையா பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com